திருமணம் செய்து வைக்கக்கோரி தொல்லை செய்த மகன்... தம்பியுடன் சேர்ந்து மகனை கொலை செய்த தாய்!

0 32214

தனக்கு திருமணம் செய்து வைக்கக்கோரி தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்த மகனை தனது தம்பியுடன் சேர்ந்து தாயே கொலை செய்த சம்பவம் தெலுங்கானாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம் விகாராபாத் மண்டலம் புலமடி கிராமத்தைச் சேர்ந்தவர் லட்சுமம்மா. இவருக்கு மொத்தம் நான்கு மகன்கள் உள்ளனர். இதில் மூன்றாவது மகனான சிவபிரசாத் மது பழக்கத்திற்கு அடிமையானவர். அதற்காக தினமும் பணம் கேட்டு தொல்லை தருவதோடு திருமணம் செய்து வைக்கும்படி தாய் லட்சுமம்மாவுடன் சண்டையிட்டு வந்துள்ளார்.

தினமும் தன்னுடன் சண்டையிட்டு வந்த மகனின் செயலுக்கு தாய் லட்சுமம்மா முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்தார். இதுகுறித்து சங்கா ரெட்டி மாவட்டம் திக்வேல் கிராமத்தில் வசிக்கும் தன்னுடைய தாய் தம்பி பூபாலுக்கு தெரிவித்தார். இதையடுத்து தனது உறவினர்களான ஸ்ரீசைலத்தை சேர்ந்த அனந்தரமுலு, பக்காய்யா மற்றும் பூபால் ஆகியோருடன் சேர்ந்து தனது மகன் சிவபிரசாத்தைக் கொல்ல திட்டம் தீட்டினார். இதற்காக ஒரு லட்ச ரூபாய் பணத்தையும் அவர்களுக்கு வழங்கினார்.

இதனையடுத்து டிசம்பர் மாதம் 1 ஆம் தேதி சிவபிரசாத்தின் தாய் மாமாவான பூபால் மது அருந்தலாம் என பிலாப்பூர் கிராமம் அருகே தனது மருமகனை அழைத்துச் சென்றார். அங்கு அனந்தராமன், பாக்கய்யாவுடன் சேர்ந்து சிவபிரசாத்தை மது அருந்த வைத்தார். அதிகமாக மது குடித்ததால் சிவபிரசாத் மயக்க நிலைக்கு சென்றார். இதற்காகவே காத்திருந்த பூபால் மற்றும் அவரது உறவினர்கள் சிவபிரசாத்தின் கழுத்தை நெரித்து கொலை செய்தனர். பின்னர் அங்குள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் குழி தோண்டிப் புதைத்தனர்.

இதற்கிடையே டிசம்பர் 7ஆம் தேதி லட்சுமம்மா தனது மகனை காணவில்லை என விகாராபாத் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரினை வைத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில் போலீசாருக்கு திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. தனது மகனின் தொல்லை தாங்க முடியாமல் லட்சுமம்மா தனது தாய் மற்றும் சகோதரனுடன் சேர்ந்து கூலி ஆட்களை வைத்து பணம் கொடுத்து கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

இதையடுத்து கடந்த சனியன்று சிவபிரசாத் புதைக்கப்பட்ட இடத்தில் ஆய்வு செய்த அதிகாரிகள் உடல் அழுகியதால் அதே இடத்தில் பிரேதப் பரிசோதனை மேற்கொண்டு மீண்டும் அதே இடத்தில் புதைத்தனர். இதையடுத்து லட்சுமம்மா, அவரது தாய் புஷ்பம்மா, சகோதரர் பூபால் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிவபிரசாத் கொலையில் வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments