பதவியை எதிர்பார்க்கவில்லை.! விரைவில் முடிவு அறிவிப்பு.!

0 6632
பதவியை எதிர்பார்த்து தாம் திமுகவில் இருந்ததில்லை என்றும் கலைஞருக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தொடர வேண்டும் என அவரிடமே கூறியதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

பதவியை எதிர்பார்த்து தாம் திமுகவில் இருந்ததில்லை என்றும் கலைஞருக்கு பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தொடர வேண்டும் என அவரிடமே கூறியதாகவும், முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தெரிவித்துள்ளார். 

மதுரை பாண்டிக்கோவிலுள்ள துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் தொண்டர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி பங்கேற்றுப் பேசினார்.

திமுகவில் தொண்டனாக இருக்கவே விரும்பினேன் என்று கூறிய அழகிரி, ஒருபோதும் பதவியை விரும்பியதில்லை என்றார். தென் மண்டல அமைப்புச் செயலாளர் பதவியை கலைஞர் வலியுறுத்தி கொடுத்ததால் ஏற்றுக் கொண்டேன் என்றும் மு.க.அழகிரி கூறினார். மத்திய அமைச்சர் பதவி தேவையில்லை என்றதாகவும் கலைஞர் தான் வலுக்கட்டாயமாக கொடுத்தார் என்றும் மு.க.அழகிரி தெரிவித்தார்.

ஸ்டாலினும் அவரது மனைவியும் தன் வீட்டுக்கு வந்திருந்தபோது, கருணாநிதிக்குப் பிறகு திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் தொடர வேண்டும் என அவரிடமே கூறியதாக மு.க.அழகிரி கூறினார். இதுபற்றி அவரது மனசாட்சிக்குத் தெரியும் என்றும் அழகிரி தெரிவித்தார்.

ஸ்டாலினுக்கு துணை முதலமைச்சர் பதவியை தாரளமாக கொடுக்குமாறு கலைஞரிடம் கூறியதாகத் தெரிவித்த மு.க.அழகிரி, நான் என்ன தவறு செய்தேன்; என்னை ஏன் கட்சியை விட்டு நீக்கினார்கள் எனத் தெரியவில்லை என்றார்.

எனது முடிவை விரைவில் அறிவிப்பேன் என்று தொண்டர்களிடம் கூறிய மு.க.அழகிரி, எந்த முடிவை அறிவித்தாலும், நீங்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments