கேரளாவில் திருமண கோஷ்டியினர் பயணம் செய்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி

0 3148
கேரளாவில் திருமண கோஷ்டியினர் பயணம் செய்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் 7 பேர் பலி

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில், திருமண கோஷ்டியினர் பயணம் செய்த பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

47 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். கர்நாடகாவில் இருந்து வந்து கொண்டிருந்த இந்த பேருந்து காசர்கோடு மாவட்டம் ராஜாபுரம் அருகே பாணத்தூர் என்ற இடத்தில் சாலையில் இருந்து தவறி பள்ளத்தில் இருந்த வீட்டின் மீது விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் கர்நாடகாவை சேர்ந்த 2 குழந்தைகள், இரண்டு பெண்கள் மற்றும் ஆண்கள் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments