வரும் வாரங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி விநியோகத்திற்கு தயாராகி விடும் -சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா

0 1638
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசி சில வாரங்களில் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும் என சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகாவின் தடுப்பூசி சில வாரங்களில் பயன்பாட்டுக்காக வெளியிடப்படும் என சீரம் இந்தியா சிஇஓ அடார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.

இந்த தடுப்பூசியை கோவிஷீல்டு என்ற பெயரில் இந்தியாவில் தயாரித்து விற்க சீரம் இந்தியா உரிமம் பெற்றுள்ளது. மத்திய தலைமை மருந்துகட்டுப்பாட்டு அலுவலர் அதற்கு அவசரகால அனுமதியை வழங்கியுள்ள நிலையில், அடார் பூனாவல்லா, இந்த தடுப்பூசி பாதுகாப்பானதுடன் செயல்திறன் மிக்கது என டுவிட் செய்துள்ளார்.

பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பில்கேட்ஸ் பவுண்டேஷன் உள்ளிட்டோருக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments