புத்தாண்டு விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு

புத்தாண்டு விடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
புத்தாண்டு விடுமுறையையொட்டி திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலையில் கடும் பனி மூட்டம் காணப்பட்ட நிலையில், தொடர் விடுமுறை காரணமாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களில் இருந்து இன்று அதிக எண்ணிக்கையில் சுற்றுலா பயணிகள் வந்தனர்.
அவர்கள் மோயர்சதுக்கம், தூண்பாறை, பைன்மரக்காடுகள், குணாகுகை ஆகிய பகுதிகளை கண்டுகளித்ததுடன், புகைப்படங்கள் எடுத்தும் மகிழ்ந்தனர்.
Comments