மதுரையில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தவுள்ள மு.க.அழகிரியை வரவேற்று பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள், போஸ்டர்கள்

0 2114

மதுரையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபடவுள்ளார்.

திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அழகிரி, மீண்டும் அக்கட்சியில் இணைய விருப்பம் தெரிவித்து அது நிராகரிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதனையடுத்து அவர் தனியாக கட்சி தொடங்கப் போகிறார் என்ற தகவல்களும் பரவி வருகின்றன. இந்த நிலையில்தான் மதுரை துவாரகா பேலஸ் திருமண மண்டபத்தில் தனது ஆதரவாளர்களை அழகிரி சந்திக்கிறார்.

ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏராளமானோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், பல இடங்களில் அழகிரியை வரவேற்று பெரிய அளவிலான பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டு போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments