செவ்வாயை ஆராய சீனா அனுப்பிய டினாவென்-1 ஆய்வுக்கலம் இதுவரை 40 கோடி கி.மீ.பயணம்..!

செவ்வாயை ஆராய சீனா அனுப்பிய டினாவென்-1 ஆய்வுக்கலம் இதுவரை 40 கோடி கி.மீ.பயணம்..!
சீனா, செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பிய டினாவென்-1 ஆய்வுக்கலம் இது வரை 40 கோடி கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளது.
அடுத்த மாதம் இந்த ஆய்வுக்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையில் நுழையும் என சீனாவின் தேசிய விண்வெளி நிர்வாக அமைப்பு தெரிவித்துள்ளது, அப்போது இந்த ஆய்வுக்கலம் பூமியில் இருந்து சுமார் 19 கோடி கிலோ மீட்டர் தொலைவில் இருக்கும்.
ஒரு ஆர்பிட்டர், லேண்டர் மற்றும் ரோவர் இணைந்த இந்த ஆய்வுக்கலம் செவ்வாயின் சுற்றுப் பாதையில் 3 மாதம் பயணித்த பின்னர் வரும் மே மாத வாக்கில் செவ்வாயில் இறங்கும் என எதிர்பார்ப்பதாக சீனா கூறியுள்ளது.
Comments