தமிழகத்தில் முதலில் சுகாதாரத்துறையினர் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

0 2434
தமிழகத்தில் முதலில் சுகாதாரத்துறையினர் 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி- சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்

மிழகத்தில் முதற்கட்டமாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த 6 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடத் திட்டமிட்டுள்ளதாக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் முன்னுரிமை மற்றும் ஒதுக்கீடு அடிப்படையில் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் எனத் தெரிவித்தார்.

இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பு மருந்தைப் பதப்படுத்திச் சேகரித்து வைக்க வசதி செய்யப்பட்டுள்ளதாகவும் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். உருமாறிய வைரஸ் தொற்றைக் குணப்படுத்தவும் இதே தடுப்பு மருந்து போதுமானது என அவர் குறிப்பிட்டார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments