தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏழாம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம் புதுச்சேரியில் வரும் ஏழாம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை வட தமிழகத்திலும் தென் தமிழகத்திலும் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது. புதனன்று பெரும்பாலான இடங்களில் இடிமின்னலுடன் கூடிய மிதமான மழையும், டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடிமின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் அதிகப்பட்சமாக விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் 4 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
Comments