சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டல் ஊழியர்கள் 16 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அனைத்து நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்த உத்தரவு

0 1684
சென்னை லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டல் ஊழியர்கள் 16 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து அனைத்து நட்சத்திர ஹோட்டல் ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்த உத்தரவு

சென்னை எம்.ஆர்.சி. நகரிலுள்ள லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டல் ஊழியர்கள் 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஐ.டி.சி. கிராண்ட் சோழா நட்சத்திர ஹோட்டலில் 85 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து, சென்னையிலுள்ள அனைத்து நட்சத்திர விடுதிகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மாநகராட்சி உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், எம்.ஆர்.சி. நகரிலுள்ள லீலா பேலஸ் நட்சத்திர விடுதியில் பணிபுரியும் 130 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. இதில், 16 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதியானவர்களை வீட்டில் தனிமைபடுத்தி மாநகராட்சி அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.

இதனிடையே, அனைத்து நட்சத்திர விடுதி ஊழியர்களுக்கும் கட்டாயம் கொரானா பரிசோதனை நடத்த வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஹோட்டல் நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments