மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்ட பிசிசிஐ தலைவர் கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக தகவல்

0 3371

நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ் கங்குலி, குணமடைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொல்த்தாவில் தனது வீட்டில் உள்ள ஜிம்மில் பயிற்சி செய்த போது அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டது.

உடனடியாக அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கங்குலிக்கு ஆன்ஜியோபிளாஸ்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல்நிலை ஸ்திரமாக உள்ளதாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments