பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் ராஜ்கபூர், திலீப்குமாரின் பூர்வீக வீடுகளை வாங்க நடவடிக்கை... ரூ.2.5 கோடி நிதி ஒதுக்கியது பாகிஸ்தான்

0 2138

பாலிவுட்டின் பிரபல நடிகர்கள் ராஜ்கபூர் மற்றும் திலீப்குமாரின் பூர்வீக வீடுகளை வாங்கி அருங்காட்சியகமாக்க பாகிஸ்தான் அரசு சுமார் இரண்டரை கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.

அவர்களின் வீடுகள் தேசிய பண்பாட்டுச் சின்னங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை கைபர் பக்துன்கவா முதலமைச்சர் மெஹ்மூத் கான் வெளியிட்டுள்ளார்.

பிரிவினைக்கு முன்பு ராஜ்கபூர், பாகிஸ்தானில் உள்ள கிஸ்ஸா குவானி பஜார் எனுமிடத்தில் உள்ள வீட்டில் பிறந்தார். இந்தியாவில் புகழ் மிக்கவராக விளங்கிய ராஜ்கபூர் காலமாகிவிட்டார். தற்போது 98 வயதாகும் நடிகர் திலீப்குமாரும் யூசுப் என்ற பெயரில் பிரிவினைக்கு முந்தைய பாகிஸ்தானில் பேஷாவர் நகரில் பிறந்தவர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments