கொரோனா தடுப்பூசியை பாஜக ஊசி என்று விமர்சித்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் -பாஜக கண்டனம்

0 977

கொரோனா தடுப்பூசியை பாஜகவின் ஊசி என்று விமர்சித்துள்ள சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவுக்கு பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.

தடுப்பூசியை தாம் நம்பவில்லை என்றும் தாம் போட்டுக் கொள்ளப் போவதில்லை என்றும் அகிலேஷ் அறிவித்தார். இது மருத்துவ விஞ்ஞான ஆய்வாளர்களை அவமதிக்கும் செயல் என்று பாஜக சாடியுள்ளது.

இதனிடையே காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் ஓமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசுகையில், கொரோனா தடுப்பூசியை வரவேற்பதாகத் தெரிவித்தார். தமது சட்டையை மடித்துக் கொண்டு தடுப்பூசியை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளத் தயார் என்றும் ஓமர் அப்துல்லா கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments