மனதில் ஏற்பட்ட காயத்தால் குண்டானேன்..! சிம்பு ஓப்பன் டால்க்

0 23092

கொரோனா கட்டுப்பாடு காரணமாக, சூம் ஆப் மூலம் கதை கேட்டு ஈஸ்வரன் படத்தில் நடித்ததாகவும், இடையில் தான் உடல் எடை கூடி குண்டானதற்கு பலரது தேவையில்லாத அட்வைஸ்களையும் கேட்டது தான் காரணம் என்று நடிகர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்...

நீண்ட இடைவெளிக்கு பின் நடிகர் சிலம்பரசன் தனது உடல் எடையை குறைத்து நடித்துள்ள ஈஸ்வரன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

விழாவில் பேசிய நடிகர் சிலம்பரசன், கொரோனா ஊரடங்கால் சூம் செயலி மூலம் படத்தின் கதையை கேட்டு படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக தெரிவித்த சிம்பு வாழ்க்கையில் அட்வைஸ் சொல்றதை நிறுத்துங்க என்றும் அட்வைஸ கேட்டதாலதான் உடல் எடை அதிகரித்து குண்டானதாக தெரிவித்தார்.

அடுத்தவர்களை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு போட்டி பொறாமை இல்லாமல் வாழவேண்டும் என்ற சிம்பு, அடுத்தடுத்து தனது நடிப்பில் படங்கள் வெளியாக இருப்பதால், இனி பேச்சை குறைத்துக் கொண்டு செயலில் காட்டபோவதாக கூறினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments