இங்கிலாந்து சென்று வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு

இங்கிலாந்து சென்று வரும் பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறை வெளியீடு
இந்தியா-இங்கிலாந்து இடையேயான விமானப் போக்குவரத்து, வருகிற 6ஆம் தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை, மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது.
அதன்படி, விமானப் பயணத்தை மேற்கொள்வோர், தங்களது புறப்பாடு தேதிக்கு, நான்கு நாட்களுக்கு முன்னர், கொரோனா பரிசோதனை செய்து, தொற்று இல்லை என்பதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
விமானப் பயணி வைத்திருக்கும் கொரோனா பரிசோதனை சான்றின் உண்மைத் தன்மையை உறுதி செய்த பிறகே, விமான நிறுவனங்கள் அவர்களை பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் இருந்து, டெல்லி உள்ளிட்ட விமான நிலையங்களுக்கு வந்துசேரும் பயணிகளுக்கு, கட்டணத்துடன் கூடிய ஆர்.டி பிசிஆர் கொரொனோ பரிசோதனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments