புத்தாண்டு தினத்தில் அதிகரித்த ஆன்லைன் உணவு விற்பனை... கடந்த ஆண்டை விட 200 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்

0 4246
புத்தாண்டு தினத்தில் அதிகரித்த ஆன்லைன் உணவு விற்பனை... கடந்த ஆண்டை விட 200 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக தகவல்

புத்தாண்டு கொண்டாட்ட நேரத்தில் நாடு முழுக்க சராசரியாக ஒரு நிமிடத்துக்கு 4,254 என்ற விகிதத்தில் உணவு முன்பதிவாகியதாக சுமோட்டோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சுமோட்டோ  நிறுவன உரிமையாளர் திபேந்தர் கோயல் தனது டுவிட்டர் பக்கத்தில், புத்தாண்டு உணவு விற்பனை மூலம் 75 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி உள்ளதாக கூறியுள்ளார்.

இது முந்தைய ஆண்டுகளைவிட 60 சதவிகிதம்  அதிகம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். புத்தாண்டு அன்று இரவு உணவு முன்பதிவு கடந்த ஆண்டை விட 200 சதவீதம் அதிகம் என்று அவர் கூறியுள்ளார்.

வீடு வீடாக உணவு சப்ளை செய்யும் பணியில் 1 லட்சம் ஊழியர்கள் ஈடுபட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments