கொரோனாவை தடுக்க சிவப்பு எறும்பு சட்னி? என பரவும் தகவல் வதந்தி - சுகாதாரத்துறைச் செயலாளர்

0 4978

சிவப்பு எறும்புகளை கொண்டு தயாரிக்கப்படும் சட்னி கொரோனாவை தடுக்கும் எனக்கூறி, வாட்ஸ் அப் உள்ளிட்ட  சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் வெறும் வதந்தி என்றும், அதனை நம்ப வேண்டாம் என்றும், சுகாதாரத்துறைச் செயலாளர் இராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

சென்னை அண்ணா நகரில், கொரோனாவுக்கு பிந்தைய சித்தா தொடர் சிகிச்சை மையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைக் கூறியுள்ளார்.

படித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments