தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்து 4 நாட்களுக்கு மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றின் திசைவேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் லேசனாது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 3, 4 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் அந்த மையத்தின் செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
5,6 ஆம் தேதிகளில் கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் ஏனைய மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை நகரில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், குமரிக்கடல் பரப்பில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசுவதால் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments