என் மீதான புகாரை நிரூபித்தால் பதவியிலிருந்து விலகத் தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

0 3304
என் மீதான புகாரை நிரூபித்தால் பதவியிலிருந்து விலகத் தயார்: அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

தம் மீதான அவதூறு குற்றச்சாட்டுகளை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிரூபித்தால் பதவி விலகத் தயார் என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

ஒருவேளை நிரூபிக்கத் தவறினால், தாம் வகிக்கும் பதவிகளில் இருந்து, மு.க.ஸ்டாலின் பதவி விலகத் தயாரா? என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பியுள்ளார். கோயம்புத்தூர் இ.எஸ்.ஐ அரசு மருத்துவமனை விழாவில் பங்கேற்றப் பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இதனைத் தெரிவித்துள்ளார்.

கேள்வி கேட்டதற்காக, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்ணை தாக்குவது கடும் கண்டத்திற்கு உரிய என்றும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments