புத்தாண்டில் சீனாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சென்றது முதல் சரக்கு ரயில்

புத்தாண்டில் சீனாவில் இருந்து ஐரோப்பாவுக்கு சென்றது முதல் சரக்கு ரயில்
சீனாவில் இருந்து ஐரோப்பிய நாடான கசக்கஸ்தானுக்குப் புத்தாண்டின் முதல் சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
சீனாவில் இருந்து ஐரோப்பாவின் பல நாடுகளுக்குச் சரக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டில் மட்டும் சீனாவின் கார்கோஸ் நகரில் இருந்து 21 தடங்களில் நாலாயிரத்து 727 சரக்கு ரயில்கள் ஐரோப்பாவின் பல்வேறு நாடுகளுக்கு இயக்கப்பட்டுள்ளன.
இவற்றின் மூலம் 66 லட்சத்து 20 ஆயிரம் டன் சரக்குகள் கொண்டுசெல்லப்பட்டுள்ளன. இந்நிலையில் புத்தாண்டில் சீனாவின் கார்கோஸ் நகரில் இருந்து ஐரோப்பாவுக்கு 54 பெட்டிகள் கொண்ட முதல் சரக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.
Comments