பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி லேசான மாரடைப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதி

0 3187
பிசிசிஐ தலைவர் செளரவ் கங்குலி லேசான மாரடைப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதி

பிசிசிஐ தலைவரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான செளரவ் கங்குலி, லேசான மாரடைப்பு காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனது சொந்த ஊரான கொல்கத்தாவில், ஜிம் ஒன்றில், இன்று காலை, கங்குலி உடற்பயிற்சி செய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென தலைச்சுற்றல் ஏற்படுவதாக கூறியதோடு, அசெளகரியாக உணர்ந்ததாக கங்குலி தெரிவித்ததை தொடர்ந்து, கொல்கத்தா உட்லாண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ பரிசோதனையில், லேசான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்ததை அடுத்து, தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. கங்குலியின் உடல்நிலை சீராக உள்ளதாக, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments