சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கு... லாக்கர் தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டம்

0 1095
சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த 103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கு... லாக்கர் தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டம்

சிபிஐ கட்டுப்பாட்டில் இருந்த, சுரானா நிறுவனத்தின் 103 கிலோ தங்கம் திருடப்பட்ட வழக்கில், தங்கம் வைக்கப்பட்டிருந்த லாக்கர் தயாரிப்பு நிறுவனத்திடம் விசாரணை நடத்த சிபிசிஐடி போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

கள்ளச் சாவி போட்டு லாக்கரில் இருந்த தங்கம் திருடப்பட்டது தெரியவந்த நிலையில், லாக்கர் தயாரித்த போது எத்தனை அசல் சாவி வழங்கப்பட்டது, அதன் பின் போலி சாவி தயாரிக்கப்பட்டதா? என்பதை அறிய லாக்கர் நிறுவனத்திடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தங்கம் வைக்கப்பட்டு சி.பி.ஐ அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்ட 3 லாக்கருக்கான 12 சாவிகளை மட்டும் கைப்பற்றாமல் சி.பி.ஐ அதிகாரிகள் அந்த கட்டிடம் முழுவதும் உள்ள லாக்கர்கள், அறைகள் ஆகியவற்றின் 70க்கும் மேற்பட்ட சாவிகளை பறிமுதல் செய்தது ஏன் என்றும் சி.பி.சி.ஐ.டி போலிசார் விசாரணை நடத்த உள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments