அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்-வானிலை ஆய்வு மையம்

காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
காற்றின் திசை வேக மாறுபாடு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த அறிவிப்பில், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழையும், சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நாளை முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. குமரிக் கடல் பகுதியில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், அங்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Comments