என்னை எதிர்த்து போட்டியிட உதயநிதி தயாரா? - குஷ்பூ சவால்

சட்டமன்றத் தேர்தலில் பாஜக தலைமை எந்தத் தொகுதியை ஒதுக்கினாலும் அதில் போட்டியிடத் தயார் எனக் கூறியுள்ள குஷ்பூ தன்னை எதிர்த்து உதயநிதி போட்டியிட தயாரா என சவால் விடுத்துள்ளார்.
சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதி பாஜக பொறுப்பாளர் குஷ்பூ சென்னை புதுப்பேட்டையில் குடிசை மாற்று வாரியப் பகுதிக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், பாஜக சிறுபான்மையினருக்கு எதிரானது என்பதைப்போல் சித்தரிக்கப்படுவதாகவும், அப்படி இல்லை என்பது இந்தத் தேர்தலின் மூலம் வெளிப்படும் என்றும் குஷ்பூ தெரிவித்தார்.
Comments