பிராண்ட் இந்தியாவுக்கு சர்வதேச அங்கீகாரத்தை பெற வேண்டும்-ஐஐஎம். சம்பல்பூர் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேச்சு

பிராண்ட் இந்தியா என்ற அங்கீகாரத்தை சர்வதேச அளவில் பெற நாட்டில் உள்ள ஐ.ஐ.எம்.கள் பாடுபட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.
பீகார் மாநிலம் சம்பல்பூரில் உள்ள ஐ.ஐ.எம்.கல்வி நிறுவனத்திற்கு நிரந்தர வளாகத்திற்கு அவர் காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், வரும் பத்தாண்டுகளை, பல பன்னாட்டு நிறுவனங்களை உருவாக்க இந்தியா அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.
தற்போது துவக்கப்படும் தொழிற்துறைகள் எதிர்காலத்தில் பன்னாட்டு நிறுவனங்களாக வளர வேண்டும் என விருப்பம் தெரிவித்த மோடி ஐஐஎம்-ல் படித்தவர்கள் அவற்றுக்கு தலைமை தாங்க வேண்டும் எனவும் கூறினார். லோக்கலை குளோபலாக தரம் உயர்த்த வேண்டும் எனவும் மோடி ஐஐஎம் மாணாக்கர்களை கேட்டுக் கொண்டார்.
Comments