சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தியதை தவிர எம்.ஜி.ஆர். வேறு எதுவும் செய்யவில்லை - ஆ.ராசா

0 32965
சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தியதை தவிர எம்.ஜி.ஆர். வேறு எதுவும் செய்யவில்லை என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார்.

சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தியதை தவிர எம்.ஜி.ஆர். வேறு எதுவும் செய்யவில்லை என திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா கூறியுள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சத்துணவு திட்டம் காமராஜர் காலத்திலேயே தொடங்கப்பட்டு விட்டதாகவும், ஆனால் எம்.ஜி.ஆர் காலத்தில் தான் தொடங்கப்பட்டது போல் அதிமுகவினர் பேசி வருவதாகவும் குற்றம் சாட்டினார். 

தொடர்ந்து பேசிய அவர், காங்கிரஸ் இயக்க தலைவர்கள் பிறந்த நாள் என்றால் ஒருகாலத்தில் கோவில்களில் வழிபாடு நடத்துவார்கள் என்றும் மிக மோசமான பிறந்த நாள் என்றால் ஜெயலலிதா பிறந்த நாள் தான். ஏனெனில் அக்னி சட்டி ஏந்துவார்கள், மண் சோறு சாப்பிடுவார்கள் என கூறினார். ஆனால் திமுக தலைவர்கள் பிறந்த நாள் என்றால் தொண்டு செய்யும் நாளாக கொண்டாடுவதாக ஆ.ராசா தெரிவித்தார்.

எம்.ஜி.ஆருக்கு இருக்கும் ஒரே அடையாளம் சத்துணவு மட்டும்தான் என தெரிவித்த அவர், சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர் தான் தொடங்கினார் என்பது போல பேசுகிறார்கள், ஆனால் அது காமராஜர் காலத்திலேயே தொடங்கி விட்டதாக கூறினார். ஜெயலலிதா ஆட்சியில் சொல்வதற்கு ஒன்றுமில்லை எனவும் அவர் விமர்சித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments