நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை

0 1850
நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் இலவசமாகவே தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 116 மாவட்டங்களில் 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. தடுப்பூசிகள் பயன்பாட்டுக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் இலவசமாகவே தடுப்பூசி போடப்படும் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

தடுப்பூசி போடுபவர்கள், மருத்துவமனைகள், பயனாளிகள், சுகாதாரப் பணியாளர்களை ஒருங்கிணைக்க கோவின் என்ற சாஃப்ட்வேரும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இந்த ஏற்பாடுகளை சரிபார்ப்பதற்கான ஒத்திகை முதல் கட்டமாக 4 மாநிலங்களில் நடத்தப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக இன்று நாடு தழுவிய அளவில் அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பங்கேற்கும் வகையில் ஒத்திகை நடத்தப்பட்டது. டெல்லியில், கொரோனா தடுப்பூசி ஒத்திகையை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஹர்ஷவர்தன், கொரோனா தடுப்பூசி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். போலியோ தடுப்பூசிகள் வந்தபோது வித விதமாக வதந்திகள் பரவியதாகவும், ஆனால் இன்று போலியோ ஒழித்துக் கட்டப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒத்திகைக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டிருப்பதாகவும், தடுப்பூசி செலுத்துவதைத் தவிர அனைத்து நடைமுறைகளும் சரிபார்க்கப்படும் என்று அவர் கூறினார். டெல்லியில் மட்டுமல்ல நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசமாகவே போடப்படும் என ஹர்ஷவர்தன் தெரிவித்தார்.

நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்ட 116 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்றது. டெல்லி, கொல்கத்தா, மும்பை, புனே, சண்டிகார், ஹைதராபாத், திருவனந்தபுரம், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களிலும், மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளிலும், 259 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடத்தப்பட்டது.

கொரோனா தடுப்பூசி போடுவதற்கு தனிப்பகுதி, தடுப்பூசி போடுபவர் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களின் தயார்நிலை, கோவின் செயலியில் பதிவு செய்து கொண்ட பயனாளியை அடையாளம் காணுதல், தடுப்பூசி போட்டுக் கொள்பவருக்கு ரத்த அழுத்தம் உள்ளிட்டவற்றை சரிபார்த்தல், ஒவ்வாமை, காய்ச்சல், சளி போன்ற அறிகுறிகள் உள்ளதா என கண்டறிதல், தடுப்பூசி போட்ட பின்னர் ஒவ்வாமை போன்ற குறைபாடுகள் ஏற்பட்டால் அதற்கு சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகள், தடுப்பூசி பாதுகாத்து வைப்பதற்கான குளிரூட்டிகள் உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் ஒத்திகையில் சரிபார்க்கப்பட்டன.

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம் என தெரிவித்திருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார். முதல் கட்டத்தில் 1 கோடி சுகாதாரப் பணியாளர்கள், 2 கோடி முன்களப்பணியாளர்கள் உட்பட, 30 கோடி முன்னுரிமை பயனாளிகளுக்கு ஜூலைக்குள் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அவர் பதிவிட்டுள்ளார். சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் தவிர்த்த மற்ற 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments