நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

0 1826
நாடு முழுவதும் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி போடப்படும் - மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி இலவசம் என தெரிவித்திருந்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், அதுகுறித்து ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

முதல் கட்டத்தில் 1 கோடி சுகாதாரப் பணியாளர்கள், 2 கோடி முன்களப்பணியாளர்கள் உட்பட, 30 கோடி முன்னுரிமை பயனாளிகளுக்கு ஜூலைக்குள் தடுப்பூசி இலவசமாக போடப்படும் என அவர் பதிவிட்டுள்ளார்.

சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் தவிர்த்த மற்ற 27 கோடி பேருக்கு தடுப்பூசி போடுவதற்கான திட்டம் இறுதி செய்யப்பட்டு வருவதாகவும் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments