தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் இன்று கொரோனா தடுப்பூசி ஒத்திகை

0 2408
தமிழ்நாட்டில் சென்னை உட்பட 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை உட்பட 5  மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை இன்று நடைபெறுகிறது.

நாட்டில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்க உள்ள நிலையில் அதற்கான ஒத்திகை நாடு முழுவதும் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை, நீலகிரி, திருநெல்வேலி, கோவை, திருவள்ளூர் ஆகிய 5 மாவட்டங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை 17 இடங்களில் நடைபெற உள்ளது.

சென்னையில் ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனை உட்பட 3 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. நீலகிரியில் உதகை மருத்துவ கல்லூரி, குன்னூர் அரசு மருத்துவமனை உட்பட 3 இடங்களில் ஒத்திகை நடைபெற உள்ளது.

நெல்லையில் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை உள்ளிட்ட 3 இடங்களிலும், பூந்தமல்லியில், அரசு மருத்துவமனை, நேமம் பொது சுகாதார மையம் ஆகிய இடங்களில் தடுப்பூசி ஒத்திகை நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments