மிஸ்டு கால் மூலம் இன்டேன் சிலிண்டர் பதிவு செய்யும் வசதி தொடக்கம்

0 9450
மிஸ்டு கால் மூலம் இன்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

மிஸ்டு கால் மூலம் இன்டேன் சமையல் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் வசதி தொடங்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதனை தொடங்கி வைத்தார்.

சிலிண்டர் பதிவு செய்வதற்கு மற்றும் புதிய இணைப்புகள் பெறுவதற்கு 84549-55555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் தரலாம் என்று அவர் தெரிவித்தார். கிராமப்பகுதியில் இருப்பவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு இந்த சேவை பயனுள்ளதாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும் வாகன என்ஜின் திறனை அதிகரிக்க பயன்படும் எக்ஸ்பி 100 என்ற மேம்படுத்தப்பட்ட ஆக்டேன் பெட்ரோலையும் அவர் தொடங்கி வைத்தார்.

டெல்லி உள்பட ஏற்கனவே 10 நகரங்களில் பயன்படுத்தப்படும் நிலையில் சென்னை உள்பட மேலும் 7 நகரங்களில் இந்த பெட்ரோல் பயன்பாட்டுக்கு வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments