காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம்

0 1275
காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர் ஒருவர் வீர மரணம் அடைந்தார்.

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள ரஜவ்ரி மாவட்டத்தின் நவ்ஷாரா பகுதியில் நேற்று மாலை பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர்.

இதில் நாயக் சுபேதார் பொறுப்பிலிருந்த ரவீந்தர் என்பவர் படுகாயமடைந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய தாக்குதலுக்கு இந்திய தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments