இந்தியக் கடற்படைக்கு 10 டிரோன்கள் வாங்க ரூ.1300 கோடி நிதி... மத்திய அரசு ஒப்புதல்

இந்திய கடற்படை கப்பலில் இருந்து இயக்கப்படும் பத்து ஆளில்லாத டிரோன் விமானங்களை வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 1300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அனுமதியளித்துள்ளது.
இந்திய கடற்படை கப்பலில் இருந்து இயக்கப்படும் பத்து ஆளில்லாத டிரோன் விமானங்களை வாங்குவதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு 1300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அனுமதியளித்துள்ளது.
வெளிப்படையான ஒப்பந்தப்புள்ளிகள் மூலம் கடற்படையினர் இந்த பத்து டிரோன்களை வாங்க உள்ளனர். மிகப்பெரிய போர்க்கப்பல்களில் இவை கண்காணிப்புக்கும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கும், கடல் மீட்புப் பணிகளுக்கும் பயன்படுத்தப்படும்.
ஏற்கனவே அமெரிக்காவில் இருந்து இரண்டு டிரோன்களை இந்தியக் கடற்படை பெற்றுள்ளது. இந்திய பெருங்கடல் பகுதியில் சீனா ஆக்ரமிப்பு செலுத்தி வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments