31 மாவட்டங்களில் கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லை - சுகாதாரத்துறை

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 921 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்து, கடந்த 24 மணி நேரத்தில் மாநிலம் முழுவதும் 921 பேருக்கு மட்டுமே வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஆயிரத்து 29 பேர், பாதிப்பிலிருந்து நலமடைந்துள்ளனர்.
கொரோனாவுக்கு ஒரே நாளில் 13 பேர் பலியாகி உள்ளனர். சென்னையில் 252 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூரில், 2- வது நாளாக கொரோனா தொற்று இல்லை. 11 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் கொரோனா பாதிப்பு பதிவானதாக தெரிவித்துள்ள தமிழக சுகாதாரத்துறை, 31மாவட்டங்களில் கொரோனா உயிரிழப்பு நிகழவில்லை என தெரிவித்துள்ளது.
Comments