"லடாக் எல்லையில்" ஓங்கியது இந்தியாவின் கை..!

0 14560
"லடாக் எல்லையில்" ஓங்கியது இந்தியாவின் கை..!

டாக் எல்லையில் சீனாவால் அசைத்து பார்க்க முடியாத அளவுக்கு மிக முக்கிய கேந்திர நிலைகளில் இந்திய ராணுவம் நிலை கொண்டுள்ளது. இதனால் எல்லையில் இந்தியாவின் கையே ஓங்கி உள்ளது.

லடாக் எல்லையில் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்தியா - சீன ராணுவத்தினர் இடையிலான மோதல் நீடித்து வருகிறது. இந்நிலையில் லடாக் எல்லையில் எத்தனை முயற்சித்தும் சீனா ராணுவத்தால் ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாத நிலையை இந்திய ராணுவம் உருவாக்கி உள்ளது.

அங்கு முக்கிய கேந்திர நிலைகளில் இந்திய ராணுவம் கைப்பற்றி உள்ளதற்காக புகைப்பட ஆதாரம் வெளியாகி உள்ளது. லடாக் எல்லையில் 16,000 அடி உயரத்தில் உள்ள பனியால் உறைந்த ஏரியான பாங்யோங் சோவின் தென்கரையை கடந்த ஆகஸ்டு மாதத்தில் இந்திய ராணுவம் தனது வசத்தில் கொண்டு வந்தது.

சீனாவால் திபேத்தில் இருந்து அகதிகளாக இந்தியாவுக்கு வந்தவர்களை கொண்டு, 1962 ஆம் ஆண்டு போருக்கு பின்னர் புதிய ராணுவ படைப்பிரிவு தொடங்கப்பட்டது. சிறப்பு முன்னணி படைப்பிரிவு என்ற பெயர் தாங்கிய இந்த படைதான் அந்த ஏரியை சீனர்களின் கண்ணில் மண்ணை தூவி கைப்பற்றியது.

அது மட்டுமின்று எல்லையில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த 13 மலை சிகரங்களையும் சிறப்பு முன்னணி படைப் பிரிவு தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

இப்போது அந்த இடங்களில் எல்லாம் சிறப்பு முன்னணி படைப்பிரிவு கொல்லும் குளிருக்கும் இடையிலும் தொடர்ந்து முகாமிட்டுள்ளதை செயற்கை கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தினால் உறுதியாகி உள்ளது. இந்திய அரசிடம் அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக பெறப்பட்ட புகைப்படங்கள் இப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.

இதன் மூலம் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இந்திய ராணுவம் தன் வசப்படுத்தி உள்ளதும், அவற்றை கடந்து ஒரு அங்குலம் கூட முன்னேற முடியாமல் சீன துருப்புகள் முடங்கி இருப்பதும் தெரியவந்துள்ளது.

ஆனாலும் இந்திய ராணுவம் நிலை கொண்டுள்ள இடத்தில் இருந்து சில மீட்டர்கள் தொலைவில் சீன துருப்புகளும் நிலை கொண்டுள்ளன. இதே போல எல்லைக்கு 5 கி. மீட்டர் தொலைவில் நிலையான ராணுவ குடியிருப்பையும் சீன உருவாக்கி உள்ளது.

கோபக் முகாம் என்ற பெயரிலான இந்த முகாமில் தான் எல்லைக்கான சீன ராணுவம் தங்கி உள்ளது. எல்லையில் ஏற்பட்ட பின்னடைவை அடுத்து, சீன ராணுவம், புதிய கமாண்டரை நியமித்துள்ளது. இந்த நிலையில் இரு நாட்டு  ராணுவ கமாண்டர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments