சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 111 கோடி ஒதுக்கீடு

0 1697
சென்னை, காஞ்சிபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளுக்காக தமிழக அரசு ரூ. 111 கோடி ஒதுக்கீடு

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர் மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் ஏற்படும் பகுதிகளில் நிரந்தர வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்வதற்காக 111 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது.

ஆண்டுதோறும் பருவமழை காலங்களின்போது இந்த 5 மாவட்டங்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர் கொள்கின்றன. எனவே அங்கு நிரந்தர வெள்ளத் தடுப்புப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு, அதற்காக 111 கோடி ரூபாயை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை ஒதுக்கியுள்ளது.

நீர் பரிமாறும் கால்வாயுடன் கூடிய நீர்த்தேக்கம் அமைத்தல், ஆற்றுப்படுகையை மறுசீரமைத்தல், வெள்ள நீரினை திருப்புவதற்காக புதிய கால்வாய்களை அமைத்தல், வெள்ளத்தடுப்பு நீரொழுங்கி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் இந்த நிதியில் அமைக்கப்பட உள்ளன என்று தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments