வடமாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்..!

0 1231
வடமாநிலங்களை வாட்டி எடுக்கும் குளிர்..!

புத்தாண்டின் முதல் நாளிலேயே வடமாநிலங்கள் கடும் குளிரின் பிடியில் நடுங்கி கிடந்தன.

அரியானாவின் ஹிசாரில் 1.2 டிகிரி செல்சியஸ் என்ற மிகக் குறைந்த வெப்பநிலை பதிவாகி உள்ளது.ராஜஸ்தானின் சிருவில் புஜ்யம் புள்ளி 2 டிகிரி செல்சியசாக வெப்பம் குறைந்து போனது.

தலைநகரில் டெல்லியில் 1.1 டிகிரி செல்சியசாக வெப்பநிலை பதிவானது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு புத்தாண்டின் முதல் நாளில் டெல்லி நகரை குளிர் நடுங்க வைத்துள்ளது.

அங்கு பனிமூட்டமும் சேர்ந்து கொண்டதால் வாகன போக்குவரத்து சிக்கலானது. 200 மீட்டருக்கு அப்பால் உள்ள எதையும் பார்க்க முடியாத நிலை டெல்லியில் நிலவியது. இதே போன்று பஞ்சாப், உ.பி, இமாச்சல், காஷ்மீர் என நாட்டின் வடமாநிலங்களில் குளிரின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments