நாட்டின் வளர்ச்சிக்கான மத்திய அரசு புதிய அணுகுமுறைகளை மேற்கொண்டுள்ளது- பிரதமர் மோடி

நாட்டின் வளர்ச்சிக்கான மத்திய அரசு புதிய அணுகுமுறைகளை மேற்கொண்டுள்ளது- பிரதமர் மோடி
நாட்டின் வளர்ச்சிக்கான மத்திய அரசு புதிய அணுகுமுறைகளை மேற்கொண்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
அனைவருக்கும் வீடு என்ற திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய அவர், இந்த புதிய திட்டம், வீடு கட்டும் பணிக்கு புதிய வழியை காட்டும் என்றார். இந்த திட்டம் நாட்டின் கூட்டாட்சிக்கு மேலும் வலு சேர்க்கும் என்ற அவர், வீடு கட்டும் திட்டம் கட்டுமான பணியில் புதிய ஆராய்ச்சிக்கு வித்திடும் என்றார்.
முந்தைய அரசுகள் வீடு கட்டும் திட்டங்களில் அக்கறை காட்டவில்லை என்றும், கட்டுமானத்தின் தரத்திலும் கவனம் செலுத்தவில்லை என்றும் அவர் கூறினார். ஆனால் இப்போது மத்திய அரசு புதிய அணுகுமுறையை மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
Comments