கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி.. அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல்?

0 2608
ஆக்ஸ்போர்டு பல்கலை-ஆஸ்ட்ராசெனகா இணைந்து கண்டறிந்துள்ள கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிக்க பரிந்துரை எனத் தகவல்

இந்தியாவில், கொரோனா நோயாளிகளின் அவசரகால மருத்துவப் பயன்பாட்டிற்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம் என, மருந்து கட்டுப்பாட்டாளர் அமைப்பு, மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன. 

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும், அந்நாட்டின் பிரபல மருந்து தயாரிப்பு கம்பெனியான ஆஸ்ட்ராசெனகாவும் இணைந்து, கொரொனோ பெருந்தொற்று தடுப்பு மருந்தை கண்டறிந்துள்ளது.

இந்த தடுப்பூசிக்கு, கோவிஷீல்டு எனப் பெயரிப்பட்டுள்ளது. இந்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசி மருந்தை, நமது நாட்டின் புனே நகரில் உள்ள சீரம் இந்தியா நிறுவனம் தயாரித்து வருகிறது. இங்கிலாந்தில், கோவிஷீல்டு தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்தியாவில்,அவசர கால மருத்துவ பயன்பட்டுக்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை அனுமதிக்க கோரி, சீரம் இந்தியா நிறுவனம் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திடம், இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமும், விண்ணப்பம் செய்தது.

இதனைத் தொடர்ந்து சீரம் இந்தியா நிறுவனத்தின் விண்ணப்பத்தை பரிசீலித்த இந்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு, மத்திய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவசரகால மருத்துவப் பயன்பாட்டுக்காக, கோவிஷீல்டு தடுப்பூசியை பயன்படுத்த அனுமதிக்கலாம் என இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் நிபுணர்கள், மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பரிந்துரையை பரிசீலிக்கும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், விரைவில், கோவிஷீல்டு தடுப்பூசியை, அவசர கால மருத்துவப் பயன்பாட்டுக்கு அனுமதிக்க ஒப்புதல் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கோவிஷீல்டு தடுப்பூசி மருந்து, 5 கோடி டோஸ் அளவிற்கு, தங்களிடம் கையிருப்பில் உள்ளதாக, சீரம் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments