டெல்லி - ஆக்ரா சுங்கச்சாலையை விற்றது ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு நிறுவனம்

டெல்லி - ஆக்ரா சுங்கச்சாலையை விற்றது ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு நிறுவனம்
ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு நிறுவனம், டெல்லி - ஆக்ரா சுங்கச்சாலையை மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய்க்கு கியூப் ஹைவேஸ் நிறுவனத்திடம் விற்றுள்ளது.
அனில் அம்பானியைத் தலைவராகக் கொண்ட ரிலையன்ஸ் கட்கட்டமைப்பு நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்த நிலையில் அதன் சொத்துக்களில் ஒன்றான டெல்லி - ஆக்ரா சுங்கச்சாலையை விற்கச் சிங்கப்பூரைச் சேர்ந்த கியூப் ஹைவேஸ் நிறுவனத்திடம் பேச்சு நடத்தி வந்தது.
இந்நிலையில் மூவாயிரத்து அறுநூறு கோடி ரூபாய்க்கு வாங்கிக்கொள்ள கியூப் ஹைவேஸ் ஒப்புக்கொண்டு அதற்கான உடன்பாடு கையொப்பமாகியுள்ளது.
இதனால் ரிலையன்ஸ் உட்கட்டமைப்பு நிறுவனத்தின் கடன் 17 ஆயிரத்து 500 கோடி ரூபாயில் இருந்து 14 ஆயிரம் கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
Comments