ஆந்திராவில் வேறு சமூகத்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த மருத்துவர் கொடூர கொலை..!

0 33717
ஆந்திராவில் வேறு சமூகத்துப் பெண்ணை காதலித்து திருமணம் செய்த மருத்துவர் கொடூர கொலை..!

ந்திர மாநிலம் கர்னூலில் காதல் திருமணம் செய்துகொண்ட பிசியோதெரபி மருத்துவரை பெண் வீட்டார் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

ஆதாம் ஆஸ்மித் என்ற அந்த மருத்துவர் அதே பகுதியைச் சேர்ந்த வேறு சமூகத்தைச் சேர்ந்த மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், 2 மாதங்களுக்கு முன் இருவரும் ரகசிய திருமணம் செய்துகொண்டு தனிக்குடித்தனம் நடத்தி வந்தனர்.

நேற்று பணிமுடிந்து இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிய மருத்துவர் ஆதாம் ஆஸ்மித்தை பின்தொடர்ந்து வந்த மர்ம கும்பல், அவரை அரிவாள் கொண்டு வெட்டியும் தலையில் கல்லைப் போட்டும் கொடூரமாக கொலை செய்துவிட்டு தலைமறைவானது. மருத்துவமனையில் அவரது உடலைப் பார்த்து அவரது தாயும் மனைவி மகேஸ்வரியும் கதறி அழுதனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments