ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு

0 9566
ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட தமிழக வீரர் நடராஜன் சேர்ப்பு

ஸ்திரேலிய அணிக்கு எதிரான கடைசி 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளார்.

2வது போட்டியின் 3வது நாள் ஆட்டத்தின்போது வேகபந்து வீச்சாளர் உமேஷ் யாதவுக்கு இடதுகாலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அடுத்த 2 போட்டிகளிலும் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது.

எனவே அவருக்கு பதிலாக அணியில் நடராஜன் சேர்க்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதேபோல் முதல் போட்டியில் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக 2வது போட்டியில் விளையாடாமல் இருந்த முகம்மது சமிக்கு பதிலாக சார்துல் தாகூர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும், ரோஹித் சர்மாவும் அணியில் சேர இருப்பதாகவும், அவர் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments