கேரளத்தில் 9 மாதங்களுக்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு..!

கேரளத்தில் 9 மாதங்களுக்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறப்பு..!
கேரளத்தில் ஒன்பது மாதங்களுக்குப் பின் இன்று மீண்டும் முதன்முறையாகப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலைத் தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் கடந்த ஆண்டு மார்ச் இறுதி வாரத்தில் நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன.
கொரோனா பரவல் விகிதம் குறைந்துகொண்டே வருவதால் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கேரளத்தில் ஒன்பது மாதங்களுக்குப் பின் இன்று மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. முகக்கவசம் அணிதல், கிருமிநாசினியால் கைகளைக் கழுவுதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல் ஆகிய விதிகளைப் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு வகுப்பறையில் 10 மாணவர்கள் அமர்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
Comments