முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம்
புதிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்ற, சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வலியுறுத்தி, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
பஞ்சாப்பை தொடர்ந்து கேரள சட்டமன்றத்திலும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் எனவும்; அதற்காகத் சட்டமன்றத்தை உடனடியாகக் கூட்டுமாறும் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் அன்புடன் கேட்டுக் கொள்வதாக கடிதத்தில் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
Comments