கொரோனா தடுப்பூசி போடுவதற்கு பயிற்சி பெற்ற 1 லட்சம் பேர் தயார்.. நாடு முழுவதும் நாளை ஒத்திகை..

0 3075
தடுப்பூசி போடுவதற்கான பயிற்சியுடன் சுமார் ஒரு லட்சம் களப்பணியாளர்கள் தயாராக உள்ள நிலையில், தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

தடுப்பூசி போடுவதற்கான பயிற்சியுடன் சுமார் ஒரு லட்சம் களப்பணியாளர்கள் தயாராக உள்ள நிலையில், தடுப்பூசி திட்டத்திற்கான ஒத்திகை நாளை நாடு முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், நெல்லை, நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பூசியின் பொதுப் பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டவுடன் புத்தாண்டின் முதல் மாதத்திலேயே தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. முன்னுரிமை அடிப்படையில் ஜூலைக்குள் 30 கோடி பேருக்கு தடுப்பூசி போடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

96 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போடும் பயிற்சி அளிக்கப்பட்டு, தேவையான களப் பணியாளர்கள், போக்குவரத்து வசதியுடன் தயாராக இருக்குமாறு மாநில அரசுகள், மாவட்ட மற்றும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்தநிலையை சரிபார்ப்பதற்காக நாடு முழுவதும் நாளை தடுப்பூசி திட்ட ஒத்திகை நடைபெறுகிறது. மாநிலங்கள்தோறும் தலைநகரங்களிலும், தேர்ந்தெடுக்கப்பட்ட மையங்களிலும் இந்த ஒத்திகை நடத்தப்படும்.

மலைப்பாங்கான பகுதிகள், சரக்கு போக்குவரத்து வசதி குறைவாக உள்ள பகுதிகளையும் இந்த ஒத்திகைக்காக சில மாநிலங்கள் இணைத்துள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையிலும், சாந்தோம் மற்றும் ஈக்காடுதாங்கல் ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் தடுப்பூசி ஒத்திகை நாளை நடைபெறுகிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் பூந்தமல்லி அரசு மருத்துவமனையிலும், நேமம் ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நடைபெறுகிறது.

நீலகிரி மாவட்டத்தில், அரசு உதகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், குன்னூர் அரசு மருத்துவமனையிலும், நெலாக்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திலும் நாளை, கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது.

நெல்லை மாவட்டத்தில் அரசு திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், சமாதானபுரம் ஆரம்பு சுகாதார நிலையத்திலும், ரெட்டியார்பட்டி பகுதி ஆரம்ப சுகாதார நிலையத்திலும் தடுப்பூசி ஒத்திகை நாளை நடத்தப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments