போர்டு மோட்டார், மகிந்திரா நிறுவனங்கள் கூட்டுத் தொழில் தொடங்கும் முயற்சி நிறுத்தம்

0 6114
போர்டு மோட்டார், மகிந்திரா நிறுவனங்கள் கூட்டுத் தொழில் தொடங்கும் முயற்சி நிறுத்தம்

போர்டு மோட்டார், மகிந்திரா நிறுவனங்கள் கூட்டாக வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலை தொடங்கும் முயற்சியை நிறுத்தி வைத்துள்ளன.

அமெரிக்காவின் போர்டு மோட்டார் நிறுவனம், மகிந்திரா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் வாகனத் தயாரிப்புத் தொழிற்சாலையைத் தொடங்கத் திட்டமிட்டிருந்தது.

2019 அக்டோபரிலேயே அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம் கொரோனா சூழலால் தள்ளிப்போனது. கூட்டுத் தொழில் நிறுவனத்தை இறுதிசெய்ய டிசம்பர் 31 வரை காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடந்த 15 மாதங்களில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களால், நிதி ஒதுக்கீட்டை மறுமதிப்பீடு செய்ய வேண்டியுள்ளதாக இரு நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.

இதனால் கூட்டுத் தொழில் முயற்சியை நிறுத்தி வைப்பதாகவும் அறிவித்துள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments