எய்ம்ஸ் மருத்துவமனை திட்ட மதிப்பீடு ரூ.2,000 கோடியாக அதிகரிப்பு... தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மத்திய அரசு பதில்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான கடன் வழங்கும் ஒப்பந்தத்தில் ஜப்பான் நாட்டு நிறுவனமான ஜிக்கா நிறுவனம் மார்ச்சில் கையெழுத்திட வாய்ப்புள்ளதாக தகவல் அரியும் உரிமை சட்டத்தில் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
முதலில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு 1,264 கோடி ரூபாயாக இருந்தது. இதில் 85 சதவீத நிதியை ஜிக்கா எனும் ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு நிறுவனம் கடனாக வழங்கும் என கூறப்பட்டது.
இந்த நிலையில், சமூக ஆர்வலர் பாண்டிய ராஜா என்பவர் ஆர்.டி.ஐ. யில் எழுப்பிய கேள்விக்கு, கடன் வழங்குவது தொடர்பாக இந்தியாவில் உள்ள ஜிக்கா அதிகாரிகள் மற்றும் ஜப்பான் நாட்டு ஜிக்கா அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் டிசம்பர் 24-ல் நடந்ததாகவும், இதற்கான ஒப்பந்தம் 2021 மார்ச்சில் கையெழுத்தாகும் என்றும் மத்திய அரசு பதிலளித்துள்ளது.
இதனிடையே எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு 2,000 கோடி ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Comments