திருப்பதியில் கேக் வெட்டி, கற்பூர ஆரத்தி எடுத்து புத்தாண்டை கொண்டாடிய பக்தர்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கேக் வெட்டியும் கற்பூர ஆரத்தி எடுத்தும் பக்தர்கள் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக இரவு பதினொன்றரை மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டு சரியாக 11.55 மணிக்கு கோவில் கதவை திறந்து சிறப்பு பூஜைகளுடன் மூலவர் சன்னதி திறக்கப்பட்டு பின் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
கடும் பனியிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் வெளியே காத்திருந்து உற்சாகத்துடன் புத்தாண்டை வரவேற்றனர்.
புத்தாண்டையொட்டி கோவில் வளாகம் முழுவதும் மின் விளக்குகள் மற்றும் பூக்களால் எழிலுற அலங்கரிக்கப்பட்டிருந்தது.
Comments