தமிழகத்தில் பல இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றி வெறிச்சோடிய சாலைகள்

0 2237
தமிழகத்தில் பல இடங்களில் அமைதியான முறையில் கட்டுப்பாடுகளுடன் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் பல இடங்களில் அமைதியான முறையில் கட்டுப்பாடுகளுடன் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது.

கோவையின் பிரதான சாலைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. அவிநாசி சாலை, திருச்சி சாலை, 100அடி சாலை, நஞ்சப்பா சாலை, பந்தய சாலை உள்ளிட்ட 35 இடங்களில் தற்காலிக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு போலீசார் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டனர். 

சேலத்தில் புத்தாண்டு கட்டுப்பாடுகளுடன் பொதுமக்கள் கொண்டாடினர். மாநகரம் முழுவதும் ஆயிரம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். 

அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம் பகுதிகளில் காவல்துறை எச்சரிக்கையை மீறி திரண்டனர். வாகனங்களில் சென்ற பொதுமக்களுக்கு இளைஞர்கள் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments