தமிழகம் முழுவதும் தேவாலயங்களில் புத்தாண்டு கொண்டாட்டம்: வண்ண விளக்குகளால் ஜொலித்த தேவாலயங்கள்

0 1376

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள பல்வேறு தேவாலயங்களில் நள்ளிரவு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன.

வேளாங்கண்ணி பேராலயத்தில் திறந்தவெளி அரங்கில் நடைபெற்ற சிறப்பு திருப்பலி நிகழ்வில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய தேவாலயங்களின் ஒன்றான கோட்டாறு சவேரியார் பேராலயத்தில் கூட்டு திருப்பலி நடைபெற்றது. புதிய ஆண்டில் நன்மைகள் பெருக பிரார்த்தனை நடத்தப்பட்டது

தூத்துக்குடி உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா ஆலயம் சின்ன கோவில் தேவாலயம் போன்ற ஆலயங்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடைபெற்றது. இதில் கொட்டும் மழையும் பொருட்படுத்தாமல் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.

குடியாத்தம், கொடைக்கானல், ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம்,மதுரை,கரூர், திருவள்ளூர் உள்ளிட்ட இடங்களில் தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.

புத்தாண்டை ஒட்டி, சென்னை ராயப்பேட்டை வெஸ்லி தேவாலயத்தில் நடைபெற்ற சிறப்பு திருப்பலியில், கிறிஸ்தவர்கள் தங்கள் குடும்பத்துடன் பங்கேற்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments