ஆங்கிலப் புத்தாண்டு தலைவர்கள் வாழ்த்து

0 676

2021 புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், தமிழக மக்களுக்கு ஆளுநர் புரோஹித், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

தமிழக மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து  தெரிவித்துள்ளார். புதிய ஆண்டிற்குள் அடியெடுத்து வைக்கும் நாம் அனைவரும் ஒன்றுபட்ட, வளமான, ஆரோக்கியமான இந்தியாவையும், தமிழகத்தையும் கட்டியெழுப்பிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழச் செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைத்திட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். மலரும் இப்புத்தாண்டு மக்களுக்கு வளமான வாழ்வையும், நிலையான வளர்ச்சியையும் தொடர்ந்து வழங்கும் ஆண்டாக மலர வாழ்த்துவதாக கூறியுள்ளார்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கடந்த கால இருள் நீக்கி கதிரொளி பரப்பி தமிழக மக்களுக்கு விடியல் தரும் புத்தாண்டை உளமார வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

அதிமுக சார்பில் ஈ.பி.எஸ். - ஓ.பி.எஸ். கூட்டாக வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில், கடந்த ஆண்டின் அனுபவங்கள் அனைத்தும் புதிய ஆண்டில் உதவட்டும் என்றும், நம்மால் இயன்ற வகையில் அனைவருக்கும் அன்பு, அமைதி, மகிழ்ச்சியை பகிர்ந்தளிப்போம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தமிழக மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், ஆளப் போகிறது நேர்மை, மீளப் போகிறது தமிழகம், மாபெரும் மாற்றத்திற்கு தயாராகி விட்ட எம் தமிழர் ஒவ்வொருவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments